தமிழக காங்கிரஸில் எஸ்.சி. பிரிவு தலைவராக இருந்த செல்வபெருந்தகையின் பதவிக்காலம் முடிவடைந்ததால் கே. எஸ் அழகிரி, தனது ஆதரவாளர் ரஞ்சித் குமாரை அப்பதவியில் நியமித்தார். ரஞ்சன் குமாரின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மாநில எஸ். சி. பிரிவில் பொறுப்பில் இருந்த முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக தங்களது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள்.
அந்த பிரிவின் துணைத் தலைவர்கள், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் , மாவட்ட எஸ்சி பிரிவு தலைவர்கள் என்று 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதால் தமிழக காங்கிரஸில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.