300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை இந்திய ராணுவத்தினர் பத்திரமாக மீட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
குஜராத் மாநிலம் சுரேந்திர நகர் மாவட்டம் துடாபூர் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணையில் சிவம் என்ற 2 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். சிறுவனின் பெற்றோர் கூலி வேலை செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 25 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டதால் இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து ராணுவம், போலீசார், மாவட்ட நிர்வாக ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
#WATCH | Indian Army safely rescues 18-month old Shivam who had accidentally fallen into a 300-ft borewell in Dudhapur village located 20 km from Dhrangadhra Taluka of Surendranagar district, Gujarat
(Source: Defence PRO, Gujarat) pic.twitter.com/b58KM4kRCl
— ANI (@ANI) June 8, 2022
8 மணி அளவில் குழந்தையை ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியே எடுத்தனர். பின்னர் சிறுவன் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டான். குழந்தையின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ராணுவம், காவல்துறை, அதிகாரிகள் சேர்ந்து 40 நிமிடங்களில் குழந்தையை உயிருடன் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.