செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஜீவன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக அதன் நிறுவனரும், நடிகருமான நெப்போலியன் பங்கேற்று விருதுகளை வழங்கினார். இதையடுத்து நெப்போலியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
“குடும்ப சூழல் காரணமாக அரசியலில் இருந்து விலகி அமெரிக்காவில் செட்டிலாகியிருக்கும் நெப்போலியன், அங்கே 300 ஏக்கர் விவசாயநிலம் வாங்கியிருக்கிறார். இவருடைய மகன் தனுஷுக்கு நீண்ட காலமாக உடல்நலம் சரியில்லாததால், அவருடைய சிகிச்சைக்காக அமெரிக்காவிலேயே செட்டிலாகிவிட்டார். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த நெப்போலியன், அமெரிக்காவில் 300 ஏக்கரில் விவசாயம் செய்யும் பண்ணையாராக தற்போது மாறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.