கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் 300 கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடைபெற்றது. இந்த விழாவுக்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராஜவேல் தலைமை தாங்கினார். இந்த விழாவின் சிறப்பு அழைப்பாளராக மணிகண்ணன் எம்.எல்.ஏ கலந்துகொண்டார்.
இவர் கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார். இந்த விழா ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் சமூகநலம் சார்பில் நடத்தப்பட்டது. மேலும் நகராட்சி தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் வைத்தியநாதன், முன்னாள் நகர செயலாளர் செல்லையா, நகராட்சி கவுன்சிலர்கள் தினேஷ் பாபு, பூம்பொழில், குரு மனோ, ரமேஷ் பாபு, சந்திரகுமார், முருகவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.