சேலம் ஏ வி ஆர் ரவுண்டானா பகுதியில் தனியார் கட்டிடத்தில் இயங்கிய சினிமா கம்பெனியில் இளம்பெண்களை நடிகையாக்குவதாக கூறி ஆபாசமாக படங்கள் வீடியோக்கள் எடுத்ததாக சேலம் மாவட்ட இடைப்பாடி சேர்ந்த இயக்குனர் வேல் சத்ரியன் அவரது பெண் உதவியாளர் ஜெயஜோதி போன்றோரை சூரமங்கலம் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். அந்த சினிமா கம்பெனியில் காவல்துறை மேற்கொண்ட சோதனையில் அதிர்ச்சி தரும் விதமாக 30 ற்கும் மேற்பட்ட ஹார்ட் டிஸ்க்குகள், கணினி, லேப்டாப், கேமரா, பென் ட்ரைவ் போன்றவை சிக்கியுள்ளது. இயக்குனரின் ஹார்ட் டிஸ்க்களில் 300க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச படங்கள் இருப்பதாகவும் அந்த பெண்களை மோசமாக படம் எடுத்து சீரழித்தது காவல் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் அவர் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்து வருகின்றார்கள் இதற்கிடையே வேல் சத்ரியனிடம் 150 ஆண்கள், 250 இளம்பெண்கள் என 400 பேர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு பயோ போட்டோ கொடுத்திருக்கின்றனர். அதனை காவல்துறையினர் கைப்பற்றி இருக்கின்றனர். இதில் சிலரிடம் தனது திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தல முப்பதாயிரம் வரையில் வேல் சத்ரியன் வசூல் செய்து இருப்பதாக கூறப்படுகின்றது. ஹார்ட் டிஸ்க்களில் சில பெண்கள் அரை நிர்வாண படங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் படத்தில் உள்ள பெண்களை கண்டறிந்து விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்திருக்கின்றார்கள்.
விழுப்புரம் மாவட்டம் கச்சிராபாளையத்தை சேர்ந்த ஒரு பெண் நேற்று வரவழைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட பின் அவரிடம் புகார் பெற்றுக் கொண்ட காவல் துறையினர் ஹார்ட் டிஸ்க்களில் இருந்த புகைப்படங்கள் எதுவும் அழிக்கப்பட்டு இருக்கிறதா அவ்வாறு அளிக்கப்பட்டால் அந்த பதிவுகளை மீண்டும் எடுக்க முடியுமா என ஆய்வுக்கான சைபர் கிரைம் பிரிவிற்கு அனுப்பி இருக்கின்றார்கள். இதற்கு இடையே பெண்களை தொலைபேசியில் பேசி மயக்கும் ஆடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் நேர்முகத் தேர்விற்கு வந்த பெண்ணை நடிக்க பழகுவது பற்றி ஆபாசமான வார்த்தைகளை அந்த பெண்ணின் தாயிடமே சொல்லி அனுமதி கேட்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வேல் சத்ரியன் மற்றும் ஜெயஜோதி போன்றோரை காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறையினர் திட்டமிட்டு இருக்கின்றார்கள்.