உப்புக்கடல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 300 பேரை நிர்வாணமாக்கி நியூயார்க் புகைப்பட கலைஞர் புகைப்படம் எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இஸ்ரேல்-ஜோர்டான் நாடுகளுக்கு இடையில் இருக்கும் உப்புக்கடல் என்று அழைக்கப்படும் டெட் சீ காலநிலை மாற்றத்தால் அதன் பரப்பளவு சுருங்கி விட்டது.
இந்நிலையில் காலநிலை மாற்றத்தை பற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகளை மக்களுக்கு உணர்த்தும் வகையிலும் 200 பெண்கள், ஆண்களை நிர்வாணமாக நிற்க வைத்து நியூயார்க்கை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஸ்பென்சர் ட்யூ நிக் புகைப்படம் எடுத்துள்ளார். பத்து வருடங்களுக்கு முன்பு அவர் எடுத்த புகைப்படத்தையும், அதே இடத்தில் இப்போது 300 பேர் நிற்கும் புகைப்படத்தையும் எடுத்துள்ளார். அதில் கடல் பரப்பளவு சுருங்கி உள்ளது தெளிவாகத் தெரிகிறது.