மத்திய பிரதேசம் மாநிலத்தில் பெதுள் மாவட்டத்தில் 300 ரூபாய் பணத்திற்காக இரண்டு சகோதரர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ரமேஷ் ககோடியா என்ற நபர் தன்னுடைய சுமன் சிங் ககோடியாவின் மனைவிக்கு 300 ரூபாய் கடனாக கொடுத்துள்ளார்.. இதனால் சகோதரர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த ரமேஷ், ஒரு குழாயை எடுத்து சுமனின் தலையில் அடித்துள்ளார்.
அதில் சுமன் பலத்த காயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சண்டையின்போது சகோதரர்கள் இருவரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாகியுள்ள அண்ணனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.