சென்னை பெரம்பூரில் நடைபெற்று வரும் கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், நான் அதிகம் பேசுவதில்லை. முதலமைச்சராக தொடர்ந்து செயலில் காட்டுவேன். தற்போது பேசியவர்கள், அளித்த பாராட்டுகள் 5 ஆண்டுகளுக்குப் பிறகும் எனது உழைப்புக்கு கிடைக்க வேண்டும். தட்டுங்கள் திறக்கப்படும் என்பார்கள். தட்டாமலேயே இங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்தலில் கொடுத்த 500 வாக்குறுதிகளில் 300-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பொங்கல், கிருஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட எந்த விழாவில் பங்கேற்றாலும் மகிழ்ச்சி தான். அனைத்து மதங்களுக்கும் அடைப்படை ஒன்று தான் என்ற அடிப்படையில் நான் இங்கு வந்துள்ளேன். வாக்களிக்காதவர்களும் பாராட்டும் வகையில் செயல்பட வேண்டும் என்பதே எனது இலக்கு. வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக விரைவில் நிறைவேற்றப்படும். 5 ஆண்டுகளில் செய்ய வேண்டியவற்றை 5 மாதங்களில் செய்து காட்டியுள்ளோம் இவ்வாறு கூறினார்.