Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலை., அறிவியல் துறை கட்டிடத்தில் 300 படுக்கைகள் – மாநகராட்சி ஆணையர் தகவல்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை வார்டுகளை இன்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர், சென்னை அண்ணா பல்கலை., அறிவியல் துறை கட்டிடம் கொரோனா சிகிச்சை மையமாகிறது, அண்ணா பல்கலை., அறிவியல் துறை கட்டிடத்தில் 300 படுக்கைகள் அமைக்கப்படுகின்றன என கூறியுள்ளார்.

குடிசை பகுதிகளில் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மக்கள் ஒத்துழைப்பு அதிகரித்து உள்ளது, முக கவசம் அணிவது போன்றவற்றை மக்கள் பின்பற்ற தொடங்கி உள்ளனர். சென்னையில் மட்டும் ஒரு நாளைக்கு 10,000 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்படுகிறது, கொரோனா பரிசோதனையில் யாரும் விடுபட்டுவிட வாய்ப்பு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |