Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

உ.பியை சேர்ந்த 300 பேர் ….. வன்முறை செய்ய பணம்….. அமித்ஷா தகவல் …!!

டெல்லி வன்முறை சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார்.

டெல்லி வன்முறைக்கு நிதியுதவி அளித்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையில் கண்டறியப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எங்கிருந்து வந்தவர்கள் என்பது குறித்து விசாரணை  நடைபெற்று வருகின்றது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 300 பேருக்கு டெல்லி வன்முறையில் தொடர்பு உடையது தெரியவந்துள்ளது.வன்முறையில் ஒரு தரப்பினர் பாதிக்கப்படுவது இரு மதத்தினரும் பாதிக்கப்பட்டனர்.

வன்முறையில் மசூதிகள் , கோவில்கள் என பாகுபாடுயின்றி அனைத்தும் சேதப்படுத்தப்பட்டன. வன்முறையில் ஈடுபட்டவர்களை   கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கண்டறியப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இருந்தனர் என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது என்று அமித்ஷா தெரிவித்தார். இதனிடையே அமித்ஷா விளக்கத்தை கண்டித்து காங்கிரஸ் எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

Categories

Tech |