தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைத்து பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், திமுக தலைவருமான முக.ஸ்டாலின், தந்தையினுடைய சிலையை திறந்து வைக்கும் மகனாக அல்ல, தலைவரோட சிலை திறந்து வைக்கும் ஒரு தொண்டனாக நான் வந்திருக்கிறேன். இதே ஈரோட்டில் மூன்றல்ல, 300 சிலைகளை கூட வைக்கலாம். எதற்காக நான் இதை அழுத்தம், திருத்தமாக குறிப்பிட்டு காட்டுகிறேன் என்றால்,
அந்த அளவிற்கு ஈரோட்டோடு ஊனோடு, உயிரோடு கலந்திருக்க கூடிய ஈரோடு தான் தலைவர் கலைஞரோடு பிணைந்து இருக்கிறது என்பதை எல்லோருக்கும் தெரியும். ஏனென்றால், கலைஞர் உருவான இடம் இந்த ஈரோடு தான். பாராட்டி போற்றி வந்த பழமைலோகம் ஈரோட்டு பூகம் இடிந்தது பார் என்று தந்தை பெரியார் அவர்களை பார்த்து கவிதை பாடியவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். அத்தகைய தந்தை பெரியார் பிறந்த ஊர் இந்த ஈரோடு.
தந்தை பெரியார் பிறந்த ஊர் மட்டுமல்ல, நம்முடைய சமூக போராளியாக வாழ்ந்த தலைவர் கலைஞர் அவர்கள் உருவான ஊரும் இந்த ஈரோடு தான். தலைவர் கலைஞர் பிறந்த ஊர் திருவாரூராக இருந்தாலும், அவருடைய குரு குலமாக விளங்கிய ஊர் தான் இந்த ஈரோடு என்பது எல்லோருக்கும் நன்றாக தெரியும் என தெரிவித்தார்.