உக்ரைன் நாட்டில் பள்ளிக்கூடத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதில்அங்கிருந்த வீரர்கள் 300 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ஐந்து மாதங்களாக தொடர்ந்து போர் தொடுத்து கொண்டிருக்கிறது. ரஷ்யப்படையினர், ஒவ்வொரு நாளும் உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதிகளை ஆக்கிரமிக்க தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.
இன்னிலையில், உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள டோனெட்ஸ்க் என்ற மாகாணத்தில் இருக்கும் கிராமடோர்ஸ்க் என்னும் நகரத்தில் உக்ரைன் நாட்டை சேர்ந்த வீரர்கள் இருந்த பள்ளிக்கூடத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், வீரர்கள் 300 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று ரஷ்ய இராணுவம் தெரிவித்திருக்கிறது.