Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

3000 கன அடி உபரி நீர் திறப்பு….. திற்பரப்பு அருவியில் குளிக்க நீடிக்கும் தடை….!!!

பேச்சிபாறை அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகள் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் பேச்சிபாறை அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 2,198 கன அடி, பெருஞ்சாணி அணிக்கு வினாடிக்கு 140 கனஅடி சிற்றார் 1 அணைக்கு வினாடிக்கு 79 கன அடி, சிற்றார் 2 அணைக்கு வினாடிக்கு 115 கன அடி, மாம்பழத்துறையாறு அணைத்து வினாடிக்கு 10 கன அடி தண்ணீர் வந்தது.

இதனை அடுத்து வினாடிக்கு 3,057 கனஅடி நீர் பேச்சுப்பாறை அணையில் இருந்தும், 100 கனஅடி நீர் பெருஞ்சானி அணையில் இருந்தும் பாசன கால்வாய் வழியாக திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மூன்றாவது நாளாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை நீடிக்கிறது.

Categories

Tech |