தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் பருவமழை காரணமாக மல்லிகை பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்து இருந்தது. அது மட்டும் இல்லாமல் ஆவணி மாதம் முழுவதும் தொடர் பண்டிகை மற்றும் சுப முகூர்த்த தினங்கள் அதிக அளவில் இருந்த காரணத்தினால் பூக்களின் விலை உச்சத்தை எட்டி இருந்தது. அதுவும் மல்லிகை பூவின் விலை அதிக அளவில் இருந்ததால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
தற்போது மதுரை மல்லிகை பூ 3000 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் கடந்த சில நாட்களாக 300 ரூபாயாக விலை சரிந்துள்ளது. கடந்த சில நாட்களாக விழா இல்லாத காரணத்தினால் பூக்கள் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை பூ விலை சரிந்து தற்போது கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.