அமெரிக்காவைச் சேர்ந்த 3000 மக்கள் ரஷ்ய படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்த விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.
உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி, ரஷ்ய தாக்குதல்களை சமாளிக்க தங்கள் நாட்டின் சர்வதேச பாதுகாப்பு படையில் சேர்வதற்கு பிற நாடுகளுக்கு அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கிறார். அதன்படி, அமெரிக்க மக்கள் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் உக்ரைன் அதிபரின் அழைப்பிற்கு இணங்கி ரஷ்ய படைகளை எதிர்த்து சண்டையிடுவதற்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்.
இதில் அதிகமானோருக்கு ஈராக், போஸ்னியா போன்ற நாடுகளில் போர் முனையில் தாக்குதலில் ஈடுபட்ட அனுபவம் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், ஜார்ஜியா மற்றும் பெலாரஸ் நாடுகளைச்சேர்ந்த மக்களும் உக்ரைன் சர்வதேச பாதுகாப்பு படையில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.