இலங்கையில் கொரோனா நெருக்கடியை சமாளிக்க ரூ.3000 கோடி ஒப்பந்தத்தில் இந்திய ரிசர்வ் வங்கி கையெழுத்திட்டுள்ளது.
இலங்கையில் அதிகமாக பரவிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றால் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தகைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து பரஸ்பர கரன்சி பரிவர்த்தனை திட்டத்தின் கீழ் ரூ.3000 கோடி மதிப்பிலான பணத் தொகையை இலங்கை பெறுவதற்கு முடிவு செய்திருந்தது. இதற்கான ஒப்பந்தத்தை விரைவில் கையெழுத்தாகும் என இலங்கை அமைச்சர் பந்துலா குணவர்தணை சென்ற ஏப்ரல் மாதத்தின் இறுதியில் கூறியிருந்தார். இதற்கான பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளின் மத்திய ரிசர்வ் வங்கிகள் சார்பிலும், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சார்பிலும் நடந்தது. மேலும் இத்தகைய ஒப்பந்தம் பற்றி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் தனித்தனியாக பிரதமர் மோடியிடம் அலைபேசி மூலமாக ஆலோசனை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து இலங்கை அரசுக்கு 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க இந்திய ரிசர்வ் வங்கி கையெழுத்திட்டுள்ளது என இலங்கையில் இருக்கின்ற இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதே சமயத்தில் இந்தியாவின் கடனை திருப்பி செலுத்துவதை மறு சீரமைப்பது தொடர்பாகவே இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது என இந்திய தூதரகம் கூறியுள்ளது.மேலும் இத்தகைய ஒப்பந்தமானது 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையில் செயலில் இருக்கும் என கூறி இருக்கின்றது.