Categories
உலக செய்திகள்

3000-திற்கும் அதிகமான பயணிகள் … தடுத்து நிறுத்தபட்ட கப்பல்..! 3 பேர் மரணம்

பெல்ஜியம் ஜிப்ராக் துறைமுகத்தில் கடந்த புதன் கிழமை முதல் லைனர் கப்பல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில்  3000-க்கும் மேற்பட்ட பயணிகள் உள்ளனர்.

சீனாவின் உருவான  கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் சுமார் 106-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. இதைத்தொடர்ந்து  பெல்ஜியத்தில்  கொரானா வைரசால் 3 பேர் உயிரிழந்த  நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பலில்  கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வந்த பயணிகள் உள்ள நிலையில் கப்பல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இத்தாலியின்  கார்னிவெல் நிறுவனத்துக்குச் சொந்தமான லைனர்  கப்பலில் சுமார் 2500 பயணிகள் மற்றும் 640 பணியாளர்கள் உள்ளனர்.

அந்நாட்டு சுகாதார துறை நோயை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இப்போதைய நிலவரப்படி 314 பேருக்கு  வைரஸ் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Categories

Tech |