Categories
தேசிய செய்திகள்

3000 ரூபாய்க்காக நடந்த பயங்கரம்…. தலைநகரில் பதற வைக்கும் சம்பவம்…. அதிர்ச்சி வீடியோ….!!!!

டெல்லியில் உள்ள சங்கம் விஹார் பகுதியில் நண்பர்களான பங்கஜ், ஜதின் இருவரும் வசித்து வந்தனர். இவர்கள் கடந்த 20-ஆம் தேதியன்று நண்பர் ஒருவரின்  பிறந்தநாள் விழாவுக்கு சென்றுவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பங்கஜ், ஜதின் இருவரையும் 7 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தனர். இதனையடுத்த இருவரிடமும் இருந்த 3 ஆயிரம் ரூபாயை 7 பேர் கொண்ட கும்பல் பறிக்க முயன்றனர்.

அதன்பின் இருவரும் அந்த கும்பலை எதிர்த்துச் சண்டை போட்டுள்ளனர். இதனால் கோபமடிந்த அந்த கும்பல் இருவரையும் கொடூரமாக தாக்கியுள்ளனர். அப்போது அந்த கும்பல் ஜதின் தலை மீது பெரிய கல்லை தூக்கிப்போட்டதோடு, பங்கஜை அடித்து சாலையிலிருந்து கால்வாயில் வீசிவிட்டு சென்றனர். இதனைதொடர்ந்து அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கான  சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ஜதின் பரிதாபமாக உயிரிழந்தார். இதனிடையில் பங்கஜ் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது இந்த கொலை சம்பவம் குறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து  கொலை வழக்கில் தொடர்புடைய ரம்சன் அலி என்பவரைக் கைது செய்தனர். மேலும் மற்ற நபர்களையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

https://twitter.com/MeghBulletin/status/1474218168826531842

Categories

Tech |