Categories
தேசிய செய்திகள் பல்சுவை வேலைவாய்ப்பு

கடைசி நாள் ஆகஸ்ட் 23….. மாதம் ரூ3,00,000 சம்பளம்….. பட்டதாரிகளுக்கு அரிய வேலை வாய்ப்பு…!!

தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில்  காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி ஊரடங்கு என்பதால், அதனை 6 கட்டத்திற்கும் மேலாக அரசு தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக, பலர் வேலை வாய்ப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்த படித்த பட்டதாரிகள் ஏதேனும் அரசு தேர்வுகள் நடத்தப்பட்டால் அதன்மூலம் அரசு வேலைக்கு சென்று விடலாம் என்ற புதிய பாதையை தேர்ந்தெடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக, தேசிய விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் ப்ராஜெக்ட் மேனேஜர், சைபர் செக்யூரிட்டி மேனேஜர், senior analyst உள்ளிட்ட 13 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதி – இளங்கலை பட்டம், சம்பளம் மாதம் ரூபாய் 2.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை. விண்ணப்பிக்க கடைசி தேதி 23 ஆகஸ்ட் மேலும் விவரங்களுக்கு www.nabard.org என்ற இணையதளத்திற்கு செல்லவும்.   

Categories

Tech |