இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு ஏற்படும் பணம் மோசடியைத் தடுப்பதற்காக வங்கிகள் சார்பாக அவ்வப்போது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வங்கி விவரங்களைத் கூடிய செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆன்லைன் வங்கி தகவல்களை இச்செயலிகளை பயன்படுத்தி மக்களின் தொலைபேசி உரையாடல் பதிவுகள் மற்றும் ஸ்கீரின் ஷார்ட்டுகள் மூலம் விவரங்களைத் திருடி வருவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. எனவே ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை மேற்கொள்பவர்கள் உஷாராக இருக்க வேண்டும்.