CCTV கேமராக்களால் 50% செயின் பறிப்பு குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
வடசென்னை பகுதி அதிமுக கட்சியின் சார்பாக 500 சிசிடிவி கேமராக்கள் காவல்துறையினருக்கு வழங்கும் நிகழ்ச்சி தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய அதிமுக உறுப்பினர்கள் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் காவல்துறை உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் பேசிய ஏ கே விஸ்வநாதன்,
சிசிடிவி கேமராக்கள் தங்களது மன உளைச்சலை, குழப்பங்களை அதிக அளவில் தீர்க்க உதவுவதாகவும் இவை வருவதற்கு முன்பு ஒரு சிறிய திருடனை கண்டுபிடிப்பதற்கு ஏராளமான சிரமங்கள் பட நேரிடும். ஆனால் சிசிடிவி வந்தபின் அப்படியான பிரச்சினைகள் எங்களுக்கு இல்லை என்று தெரிவித்தார்.
மேலும் தங்க விலை அதிகரிக்க அதிகரிக்க செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வந்தன. ஆனால் 2010க்கு பின் சிசிடிவி கேமராக்களின் அறிமுகத்தால் செயின் பறிப்பு 50% குறைந்துள்ளன. இதுவரை 70 சதவிகிதம் சிசிடிவி கேமராக்கள் தமிழகத்தில் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன ஆனால் எங்களுடைய இலக்கு சென்னையில் மட்டுமே 3 லட்சம் சிசிடிவி கேமராக்கள் அமைப்பது என்று அவர் தெரிவித்துள்ளார்.