நாடு முழுவதும் 30 கோடிப் பேர் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதித்துணை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் பதிலளிக்கையில், ஜனவரி 27-ஆம் தேதி நிலவரப்படி 30 கோடியே 75 லட்சம் பேர் பான் எண்ணுடன் ஆதாரை இணைத்திருப்பதாகவும் 17 கோடியே 58 லட்சம் பேரின் பான் எண் ஆதாருடன் இணைக்கப்படவில்லை என்றும், அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நிரந்தரக் கணக்கு எண்ணை (பான்) ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.