தமிழகம் முழுவதும் கோளாறு ஏற்பட்ட 305 மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் மாற்றப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் வாக்கினை செலுத்தினர்.
இதனிடையே தமிழகத்தில் சில இடங்களில் வாக்கு பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக வாக்கு செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 305 மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் கோளாறு ஏற்பட்டு சரியாக வேலை செய்ய வில்லை. இதையடுத்து கோளாறு ஏற்பட்ட 305 இயந்திரத்திரங்கள் மாற்றப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.