தமிழ்நாட்டில் தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டி 4வது முறையாக நடைபெற உள்ளது.
இந்திய கூடைப்பந்து சம்மேளனம் ஆதரவுடன் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தேசிய கூடைப்பந்து போட்டி சென்னையில் நடத்தப்பட்டு வருகின்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று இந்த போட்டி தொடங்குகிறது. பத்தாம் தேதி வரை எட்டு நாட்கள் இந்த போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 32 அணிகள் பங்கேற்கின்றன.
ஆண்கள் பிரிவில் 16 அணிகள் இடம்பெற்றுள்ளன அவைகள் நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஏ பிரிவில்:பஞ்சாப், குஜராத், கேரளா, தெலுங்கானா
பி பிரிவில்:உத்தரப்பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், சர்வீசஸ்
சி பிரிவில்:உத்தரகாண்ட், டெல்லி, மிசோரம், தமிழ்நாடு
டி பிரிவில்: மத்திய பிரதேசம், அரியானா மேற்கு வங்காளம், இந்தியன் ரெயில்வே,
அதேபோன்று பெண்கள் பிரிவில் 15 அணிகள் கலந்து கொள்கின்றன.
ஏ பிரிவில்: இந்தியன் ரெயில்வே, டெல்லி, மராட்டியம், தமிழ்நாடு
பி பிரிவில்:உத்தரபிரதேசம், கேரளா, மத்திய பிரதேசம்
சி பிரிவில்:தெலுங்கானா, ஒடிசா, அரியானா,
டி பிரிவில்:ராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்காளம்
தமிழக அணிகள் இதுவரை 10 முறை தேசிய சீனியர் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. தமிழக பெண்கள் அணி இரண்டு முறை இரண்டாவது பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.