இளைஞர் ஒருவர் மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் 31 வயது பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி பாலியல் வன்கொடுமை செய்து திருமணம் செய்து கொள்ள தற்போது மறுக்கிறார். மேலும் தன்னிடம் 21 லட்சம் பணம் மோசடியும் செய்துள்ளார். மேலும் அந்த இளைஞர் இதேபோன்று பல பெண்களோடு பழகி ஏமாற்றுகிறார் என்று தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட நீதிபதி, பெண்கள் எல்லாம் அவருக்காக உருகுவதற்கு அந்த வாலிபர் என்ன ஹீரோவா? அவர்கள் என்ன செய்கிறோம் என அந்த பெண்களுக்கு தெரியவில்லையே.
31 வயதான இந்த பெண்ணுக்கும் அந்த நபரை ஏழு வருடங்களாக தெரியும். அப்படி இருக்கையில் அந்த வாலிபரை பற்றி இந்த பெண்ணுக்கும் அந்த பெண்களுக்கும் ஏதும் தெரியவில்லையா ? என்று கோபமாக கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் அந்த இளைஞருக்கு பிணை வழங்கிய நீதிமன்றம் இது 31 வயது பெண்ணுக்கும் 35 வயது ஆணுக்கும் வயது முதிர்ந்த இருவருக்கும் இடையேயான விஷயம். சமூக ஊடகங்களில் இருதரப்பினரும் எந்த ஒரு பதிவையும் வெளியிடக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது