ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 3,115 தொழில் பழகுணர் பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. எலக்ட்ரீசியன், பிட்டர்,வயர் மேன் மற்றும் பெயிண்டர் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தொழிற் பழகுணருக்கான அறிவிப்பை மத்திய ரயில்வே வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: பழகுனர்களுக்கு பயிற்சி
காலி பணியிடங்கள்: 3,115
கல்வி தகுதி: ஐடிஐ கல்வியில் பணியிடங்களுக்கு ஏற்ப பட்டப் படிப்பு.
தேர்வு முறை: மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப்பட்டியல் தயாரிக்கப்படும். எழுத்து மற்றும் வாய்மொழி போன்ற எந்த தேர்வு நடத்தப்படாது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 29
மேலும் இது குறித்த கூறுதல் விவரங்களை அறிய www.rrcer.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.