அத்திவரதர் வைபவத்தில் பணியாற்றிய துப்புரவு பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சால்வை அணிவித்து பாராட்டினார்.
காஞ்சிபுரத்தில் 48 நாட்கள் நடைபெற்ற அத்திவாரதர் வைபவ திருநாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதில் பாதுக்காப்பு பணியில் இரவு பகலாக உழைத்த காவல்ல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினரை பாராட்டி சிறப்பிக்கும்விதமாக பாராட்டு நிகழ்ச்சி ஒன்றை மாவட்ட ஆட்சியர் பொன்னையா நிகழ்த்தினார்.
இந்நிலையில் நாள்தோறும் 30 டன் கழிவுகளை சென்னை உள்ளிட்ட நான்கு மாநகராட்சிகள், நகராட்சிகள் என 3,617பேர் 150 வாகனங்கள் மூலம் குப்பையை அப்புறப்படுத்தும் பணியில் செயல்பட்டு வந்தனர். அவர்களது பணி நேற்று நிறைவு பெற்ற நிலையில் ஆட்சியர் பொன்னையா அவர்களை கவுரவிக்கும் விதத்தில் சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்.