சென்னையில் 31ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டமானது மிக விமர்சையாக கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில், சென்னையில் பல்வேறு கட்டுப்பாடுகளும் – நிபந்தனைகளை விதித்து தமிழக காவல்துறை மட்டுமல்லாமல், சென்னை காவல்துறை ஆணையர் இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என தெரிவித்திருந்த நிலையில்,
அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அம்பேத்கர் பாலம், ஆர்.கே சாலை வழியாக இலக்கை அடையலாம். காமராஜர் சாலை முதல் கலங்கரை விளக்கம் வரை இரவு 8 மணி முதல் சாலை மூடப்படும். தெற்கு கால்வாய் கரை சாலையிலிருந்து கலங்கரை விளக்கம் வரை வாகனங்கள் அனுமதி கிடையாது. அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியேற அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 16,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.