32 வருடமாக ஒருவர் கற்களை மற்றும் உணவாக சாப்பிட்டு வாழ்ந்து வருகிறார். இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
மகாராஷ்டிரா மாநிலம் சத்ரா மாவட்டத்தை சேர்ந்த 78 வயதாகும் ராம் தாஸ் என்பவர் 32 வருடங்களாக கற்களை உண்டு வருகிறார். சிறுவயதில் வயிற்று வலி ஏற்பட்ட போது பல மருந்துகளை சாப்பிடும் வயிற்று வலி சரியாகவில்லை. இதையடுத்து அவரது பாட்டி கல்லை உண்ணுமாறு கொடுத்தார்கள். அதை உண்ட பிறகு வயிற்று வலி சரியாகி விட்டதாம். இதனால் அன்றிலிருந்து கல்லை சாப்பிட்டு வருகிறாராம்.
வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் கல்லை சாப்பிட வேண்டாமென்று கூறியும் கேட்காமல் சாப்பிட்டு வந்துள்ளார். மேலும் இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது மனநல பாதிப்பு காரணமாக இந்த பழக்கத்திற்கு ஆளாவது சகஜம். இதனை இவ்வாறு கூறலாம். மனிதர்கள் எதை சாப்பிடக்கூடாது என்று கூறுகிறோம். அந்த பொருளை சாப்பிடுவார்கள். சிலர் கல், மண், மூடி, அலுக்கு போன்றவற்றை விரும்பி சாப்பிடுவார்கள். சிலர் கண்ணாடி மற்றும் ஊசி போன்ற கூர்மையான பொருட்களை விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்த பழக்கத்துக்கு உள்ளவர்கள் சிறிது நாட்கள் கழித்து அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் உள்ள கழிவுகளை வெளியே எடுத்த பின்பு உயிர் வாழ்வார்கள். இது தற்போது சகஜமாகி வருகிறது. மனநோயின் காரணமாக தொடர்ச்சியாக அவர்களால் இந்த உணவை எடுத்துக் கொள்வார்கள். இந்த உணவுகளை மட்டும் உண்டு உயிர் வாழமுடியாது. மற்ற உணவுகளையும் சாப்பிட்டால் தான் அவர்களால் உயிர் வாழ முடியும். ஆனால் அப்போது இந்த உணவுகளையும் சேர்த்து எடுத்துக் கொள்வார்கள்.