கடந்த 1983-ஆம் வருடம் பாரதிராஜா இயக்கத்தில் வெளியாகிய மண்வாசனை படத்தின் வாயிலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்தான் ரேவதி. இதையடுத்து இவர் கை கொடுக்கும் கை, புதுமைப் பெண், வைதேகி காத்திருந்தாள், பகல் நிலவு, மௌன ராகம் உட்பட பல படங்களில் நடித்து 80 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகியாக வலம்வந்தார். அத்துடன் மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமடைந்தார். அதுமட்டுமின்றி ரேவதி சில படங்களையும் இயக்கி இருக்கிறார்.
இப்போது இந்தியில் “சலாம் வெங்கி” எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கஜோல்,விஷால்,ஜெத்வா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அத்துடன் பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஆமீர்கான் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இத்திரைப்படம் அடுத்த மாதம் 9ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சல்மான்கான் நடத்தக்கூடிய ஒரு நிகழ்ச்சியில் ரேவதி பங்கேற்றார். அப்போது ரேவதி, 32 ஆண்டுகளுக்கு பிறகு சல்மான்கானுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.