புகழ் பெற்ற அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்று வரும் பணிகளை நேற்று பொதுப்பணிகள், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலூர் ஆய்வு செய்தார். இதில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் டாக்டர். கே. மாணிக்கவாசகம், முதன்மை தலைமை பொறியாளர் ரா. விஸ்வநாத், பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் செல்வகுமார், துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் அமைச்சர் எ.வி. வேலு நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆசியாவின் 2-வது மிகப்பெரிய நூலகம் ஆகும். இந்த நூலகம் தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது கட்டப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் நூலகத்தை ஆய்வு செய்தார்.
அப்போது அவர் இவ்வளவு அதிகமான புத்தகங்களை கொண்ட பறந்து விரிந்த ஒரு நூலகத்தை வேரும் எங்கும் கண்டதில்லை என பாராட்டினார். ஆனால் நூலகம் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. இதனை சீர் செய்வதற்காக நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 25.10.2021 அன்று 32.49 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டார். அதில் சிவில் பணிக்காக 18. 26 கோடியும், மின்பணிக்காக 14.23 கோடியும் ஒதுக்கப்பட்டது. இந்த நூலகம் மொத்தம் 8 தளங்களை உடையது. அதில் 7-வது தளம் ஓலைச்சுவடிகளுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தளத்தில் உள்ள ஓடை சுவடிகளை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாதுகாக்கவும் , மக்கள் பார்வைக்கு சென்றடையவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக 30,160 சதுர அடி அளவுக்கு தரைவிதிப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் 30.9.22 அன்று நிறைவு பெரும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்