இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற பயணி ஒருவர் 3200 வயகரா மாத்திரை உடன் சிக்காக்கோ விமான நிலையத்தில் பிடிபட்டார்.
இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்ற ஒருவர் சிக்காக்கோ விமான நிலையத்தில் இறங்கியுள்ளார். அப்போது விமான நிலைய ஊழியர் அவரது பையை ஸ்கேன் செய்தால், அப்போது ஏராளமான மாத்திரைகள் இருந்தது போன்று தெரிய வந்தது. உடனே சுங்கத் துறைக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அவர்கள் வந்து சோதனையிட்டு பார்த்தபோது, அதில் 70 லட்சம் மதிப்பில் 3200 வயாகரா மாத்திரைகள் இருந்தது.
இதையடுத்து சுங்கத் துறை அதிகாரிகள் வயாகரா மாத்திரைகளை அந்த நபரிடம் இருந்து பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபர் இந்த மாத்திரைகள் குறித்து போதுமான விளக்கம் கூறவில்லை என்பதால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து மாத்திரைகளை அமெரிக்க கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.