பீஸ்ட் என்பவர் தன்னுடைய கையில் ஒரு பவுண்ட் எடையுள்ள dumbbell-ஐ வைத்திருக்கிறார். இவர் gym வீரர் ஒருவருக்கு சவால் விடுகிறார். அது என்னவென்றால் ஒரு பவுண்ட் எடையுடைய dumbbell-ஐ எத்தனை முறை அந்த gym வீரர் தூக்குகிறாரோ அத்தனை டாலர் அவருக்கு கிடைக்குமாம். உதாரணத்திற்கு gym வீரர் ஒருமுறை dumbbell-ஐ தூக்கினால் ஒரு டாலர் கிடைக்கும். இதில் என்ன ஒரு சுவாரசியமான விஷயம் என்றால் gym வீரர் எத்தனை தடவை வேண்டுமானாலும் dumbbell-ஐ தூக்கலாம். அதற்கு எந்தவித நேர கட்டுப்பாடும் கிடையாது.
இந்த சவாலை gym வீரருக்கு கொடுத்துவிட்டு பின் அவர் அங்கிருந்து கிளம்புகிறார். பின்னர் பீஸ்ட் சிறிது நேரம் கழித்து வந்து பார்க்கையில் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர் எதற்காக அதிர்ச்சி அடைந்தார் என்று பார்க்கையில் dumbbell-ஐ தூக்கும் சவாலில் அந்த நபர் கிட்டத்தட்ட 32 ஆயிரம் டாலரை வென்றுள்ளார். அப்படி என்றால் அந்த நபர் கிட்டத்தட்ட 32ஆயிரம் தடவை dumbbell-ஐ தூக்கியிருக்கிறார் என்பதுதான் உண்மை. இதனை அடுத்து பீஸ்ட் என்பவர் மறுபடியும் அந்த gym வீரருக்கு வேறொரு சவால் விடுகிறார்.
அது என்னவென்றால் மறுபடியும் 20 பவுண்ட் எடையுடைய dumbbell-ஐ ஒரு தடவை தூக்கினால் கூடுதலாக 20 ஆயிரம் டாலர் தருவதாக கூறியிருக்கிறார். ஆனால் இதில் என்ன ஒரு சிக்கல் என்றால், ஏற்கனவே அவர் 32,000 தடவை dumbbell-ஐ தூக்கியிருக்கிறார். அதனால் அவரால் இந்த தடவை 20 பவுண்ட் எடையுடைய dumbbell-ஐ எடுக்கும் போது gym வீரரின் கை சற்று நடுக்கமாக இருந்தது. ஆனாலும் விடா முயற்சி வெற்றி தரும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு அவர் துணிவோடு செயல்பட்டதால் 20 பவுண்டு எடையுடைய dumbbell-ஐ ஒரு தடவை தூக்கி மேலும் 20 ஆயிரம் டாலரை சம்பாதித்து இந்த சவாலில் வெற்றியும் கண்டுள்ளார்.