Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ஊரடங்கு கட்டுப்பாடுகள்…. முககவசம் அணியாமல் சென்றவர்கள்…. 323 பேர் மீது வழக்குபதிவு….!!

முகக்கவசம் அணியாமல் சென்ற குற்றத்திற்காக 323 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மாநில அரசுகள் கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரை அறிவித்துள்ளது. அதன்படி அத்தியாவசிய கடைகள் அனைத்தும் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கும் எனவும் போக்குவரத்து முற்றிலுமாக ரத்து செய்யப்படும் எனவும் அறிவித்திருந்தது.

இதேபோல் முழு ஊரடங்குகின் போது தேவையின்றி வெளியில் சுற்றித் திரிபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி தமிழக அரசு காவல்துறையினரை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மட்டும் முக கவசம் அணியாமல் சென்றதனால் 323 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் வாகனங்களில் தேவையின்றி சுற்றித் திரிவோரையும் காவல்துறையினர் அழைத்து மீண்டும் இதுபோன்ற செயலில் ஈடுபட கூடாது என அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |