ரஷ்யாவில் 325-ஆவது கடற்படை தினத்தை முன்னிட்டு நடந்த நீர்மூழ்கி கப்பல்கள், போர்க் கப்பல்களின் கண்கவர் அணிவகுப்பானது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ரஷ்யாவில் கப்பல்படை தொடங்கப்பட்டதன் 325-ஆவது நிறைவு விழாவை முன்னிட்டு போர்க் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்களின் அணிவகுப்பு சிறப்பாக நடைபெற்றுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கண்காணிப்புக் கப்பல்கள், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், கடற்படை விமானங்களின் கண்கவர் அணிவகுப்பும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பின்லாந்து வளைகுடா பகுதியில் நடந்துள்ளது. அதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நடுக்கடலில் நடைபெற்ற அணிவகுப்பை பார்வையிட்டுள்ளார்.
அதன்பிறகு அதிபர் புடின் உரையாற்றிய போது வான் வழியிலும், நீருக்கு கீழும், மேல் பகுதியிலும் எதிரிகளை கண்டறியும் வல்லமை தங்களிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் எதிரிகள் எல்லையை தாண்டி வரும்போது அவர்கள் தடுக்க முடியாத அளவிற்கு தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் 45 போர் விமானங்கள், 40 போர் கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை ரஷ்ய கடற்படை தின கொண்டாட்ட அணிவகுப்பில் பங்கேற்றுள்ளது. அதனை பார்வையாளர்கள் உற்சாகமாக கண்டுகளித்துள்ளனர்.