Categories
தேசிய செய்திகள்

33ஆவது நாளாக போராட்டம்…! மோடிக்கு கடிதம் எழுதி…. வழக்கறிஞர் தற்கொலை …!!

மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறாததை கண்டித்து, பஞ்சாபைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் டெல்லி போராட்டக்களத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, டெல்லியில் 32-வது நாளாக லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுடனான பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், போராட்டம் நீடிக்‍கிறது. கடும் குளிர், உடல்நலக் குறைவு காரணமாகவும், தற்கொலை செய்தும் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டக்களத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெறாததால் மனமுடைந்த பஞ்சாபைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், டெல்லி போராட்டக்களத்திற்கு அருகே விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

விவசாயிகள் போராட்டத்திற்காக தனது உயிரை தியாகம் செய்வதாகவும், பிரதமர் திரு.நரேந்திர மோதி விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் கடிதம் எழுதி வைத்துவிட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியின்போது, பிரதமருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், போராட்டக்களத்தில் விவசாயிகள் தட்டுகளை அடித்து ஒலி எழுப்பினர்.

பிரதமர் எப்போதும் உரையாற்றிக்கொண்டே இருப்பதாகவும், தங்களது குரலை கேட்கவில்லை என்றும் குற்றம் சாட்டிய விவசாயிகள், அவரது உரையை புறக்கணிக்கும் வகையில் தட்டுகளை அடித்து ஒலி எழுப்பினர். கொரோனாவை விரட்ட ஒலி எழுப்பும்படி பிரதமர் கூறியதை சுட்டிக்காட்டிய விவசாயிகள், இந்த கருப்பு சட்டங்களை விரட்டியடிக்கும் நோக்கில் தாங்கள் தற்போது தட்டுகளை அடித்து ஒலி எழுப்புவதாகவும் குறிப்பிட்டனர்.

Categories

Tech |