Categories
மதுரை மாவட்ட செய்திகள்

33 ஆவது தடவையா இத கொடுக்குறாரு…. மதுரை கலெக்டர் அலுவலகம்…. பிச்சைக்காரருக்கு குவியும் பாராட்டுக்கள்….!!

மதுரையில் பிச்சைக்காரர் 33 வது தடவையாக 10,000 ரூபாயை நிவாரண நிதியாக கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தார்.

இந்த நவீன யுகத்தில் சில நேரங்களில் ஏதேனும் ஒரு பகுதியில் இயற்கை பேரழிவு ஏற்படும். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் நிவாரண நிதி வழங்குவது வழக்கம். இதனிடையே சில தன்னார்வலர்கள் மக்களுக்கு உதவும் பொருட்டு நிவாரண நிதியாக அரசாங்கத்திற்கு பணம் வழங்குவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பிச்சைக்காரரான பூல் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார்.

இவர் இதுவரை தான் பிச்சை எடுத்த பணத்தில் 32 தடவை நிவாரண நிதியாக 10,000 ரூபாயை அரசாங்கத்திற்கு கொடுத்துள்ளார். அதேபோல் தற்போது 33 ஆவது முறையாக 10,000 ரூபாயை நிவாரண நிதியாக மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தார். இவரின் இச்செயலுக்காக அனைத்து மக்களும் பூல்பாண்டியை பாராட்டி வருகிறார்கள்.

Categories

Tech |