Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

33-வது கரும்பு அரவை தொடக்க விழா….. தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் ….!!

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி சர்க்கரை ஆலையில் கருப்பு அரவை  விழாவை தொடங்கி வைத்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள படமாத்தூர்  கிராமத்தில் அமைந்துள்ள சர்க்கரை ஆலையில் 33-வது ஆண்டிற்கான கரும்பு அரவை தொடக்க விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, மாவட்ட மேலாண்மை இயக்குனர் வெங்கடேசன், முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தண்டியப்பன், கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் சக்திவேல், சிவகங்கை, தூத்துக்குடி  விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி கரும்பு கட்டுகளை கரும்பு அரைக்கும் கேரியரில்  போட்டு விழாவைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றியுள்ளார்.

Categories

Tech |