Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தோட்டத்திற்கு சென்ற விவசாயி…. இறந்து கிடந்த ஆடுகள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

வெறிநாய்கள் கடித்ததால் 33 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள வலங்காவயல் கிராமத்தில் விவசாயியான சோலை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமாக 38 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் தோட்டத்தில் இருக்கும் கொட்டகையில் ஆடுகளை அடைத்துவிட்டு சோலை வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து மறுநாள் காலை தோட்டத்திற்கு சென்று பார்த்த போது 33 ஆடுகள் இறந்து கிடப்பதை கண்டு சோலை அதிர்ச்சி அடைந்தார். மேலும் 5 ஆடுகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

இதுகுறித்து சோலை தேவகோட்டை கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கால்நடை மருத்துவர்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் 3 வெறி நாய்கள் கடித்து குதறியதால் ஆடுகள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |