Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் செம கெத்து…. 5 நாளில் 330 பேர்…. தெறிக்கவிட்ட மருத்துவர்கள் …!!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 400யை தாண்டியுள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது.பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எந்த அளவு இருக்கின்றதோ அதற்கு இணையாக அல்லாமல் குறைந்த அளவிலே தினமும் குணமடைந்து மக்கள் வீடு திரும்புகிறவர்களின் எண்ணிக்கை இருந்து வந்ததாலும் கொரோனா பாதித்தவர்களுக்கு மரணம் இல்லை, குணமடைய முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்து வந்தது.

 

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட தகவலில், தமிழகத்தில் இதுவரை 40,876 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன 21,381 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 20 பேர் அரசு முகாமிலும் கண்காணிப்பில் உள்ளனர். இன்று புதிதாக 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் நேற்று வரை1,372 ஆக இருந்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,477 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்ற 46 பேர் குணமடைந்து சென்றதால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 365திலிருந்து 411 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் (15/37 பேர், 16/62 பேர், 17/103 பேர், 18/82 பேர்) என  330 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இது தமிழக மருத்துவர்களின் மிகப்பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகின்றது. இது தமிழக மக்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

 

Categories

Tech |