நியூசிலாந்தில் உள்ள மவுண்ட் ஓவன் என்ற இடத்தில் கடந்த 1987-ம் ஆண்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஒரு பறவையின் கால் அழுகாமல் கிடைத்துள்ளது. இந்த கால் நோவா என்ற பறவையுடையது ஆகும். இந்தப் பறவைகள் 800 வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்த உயிரினம் ஆகும்.
இதனையடுத்து பறவையின் காலை தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு செய்த போது அந்த கால் 3,300 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு பறவையுடையது என்பது தெரியவந்தது. ஆனால் அந்தப் பறவையின் கால் 3,300 வருடங்களாக எப்படி அழுகாமல் இருக்கிறது என்பதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.