Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் இன்று கொரோனோவால் 332 பேர் பாதிப்பு – மொத்த எண்ணிக்கை 6,000ஐ தாண்டியது!

சென்னையில் இன்று கொரோனோவால் 332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 332 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,278 ஆக உயர்ந்துள்ளது.சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

குறிப்பாக ராயபுரத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று பாதிக்கப்பட்ட 434 பேரில் 93 பேர் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். தமிழகத்தில் 3வது நாளாக கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இன்று ஒரே நாளில் 10,535 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பரிசோதனை மையங்கள் எண்ணிக்கை 58லிருந்து 61ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |