Categories
சற்றுமுன் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று மட்டும் 335 பேர்…. 5000ஐ கடந்த பாதிப்பு…. மதுரையை முடக்கிய கொரோனா …!!

மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 5000த்தை கடந்து இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தைப் பொருத்தவரை இன்று ஒரு நாள் மட்டும் 335 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக கொரோனா நோய்களினால் மொத்த எண்ணிக்கையானது 5 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. இது மதுரை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை மாவட்டத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் பார்த்தோமானால் 336 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,

நேற்று வரை 4674பேர் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை யாக இருந்த நிலையில், இன்று 335 பாதிக்கப்பட்டு உறுதி செய்வதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை 5009 ஆக உயர்ந்திருக்கிறது. மதுரை மாவட்டத்தில் இதுவரை 1,111 பேர் குணமடைந்து  வீடு திரும்பி இருக்கும் நிலையில் 3 ஆயிரத்து 821 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  கொரோனா தொற்று காரணமாக மதுரை மாவட்டத்தில் 77 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |