தமிழகத்தில் ஆட்டோக்களில் 2பேர் மட்டுமே செல்ல அனுமதி என தமிழக அரசு கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் வரும் திங்கள்கிழமை 26ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கிளப்ஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு பயிற்சி மையம் அகாடமி செயல்பட அனுமதி இல்லை. எனினும் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்காக பயிற்சிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது என்று அறிவிப்பு வந்திருக்கிறது.
புதுச்சேரியை தவிர்த்து ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா அனைத்து மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் நபர்களுக்கு இ-ரிஜிஸ்டர் இணையதளத்தில் பதிவு செய்து விபரத்தைக் தமிழ்நாட்டிற்கு நுழையும்போது காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். வெளி நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு விமானம், கப்பல் மூலம் வருபவர்களுக்கு அதேபோல் இ-ரிஜிஸ்டர் கட்டாயம் என்று சொல்லப்படுகிறது.
ஒரு தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்வது அனுமதி இல்லை. வாடகை வாகனம் மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் தவிர்த்து 3 பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதி. ஆட்டோக்களில் ஓட்டுநர் தவித்த 2 பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது . இதை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை பட்டிருக்கிறது.