சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பெண்ணை வரதட்சணை கொடுமை செய்ததாக கணவர் உள்பட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கண்டனூரில் சீதாலட்சுமி (30) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா முத்தூரில் வசித்து வரும் பழனிவேல் (31) என்பவருக்கும் காலேஜ் படிக்கும்போது காதல் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர்கள் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் கணவன் குடும்பத்துடன் வசித்து வந்த சீதாலட்சுமியை கல்லூரிக்கு செல்ல அவர்கள் குடும்பத்தினர் தடை விதித்ததால் கணவன்-மனைவி இருவரும் தனியாக குடித்தனம் நடத்தி வந்தனர்.
இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் பழனிவேல் குடும்பத்தினர் சீதாலட்சுமியை வரதட்சணை கொடுமை செய்ததாக தெரிகிறது. அதன்பின் அவருடைய கணவர் வெளிநாடு சென்று திரும்பிய பின் தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். சீதாலட்சுமியை அவரை பார்க்க அனுமதிக்கவில்லை. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் கணவர் உட்பட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.