அமெரிக்காவில் இதுவரை பொதுமக்களுக்கு 34.2 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசு அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் பொதுமக்களுக்கு பைசர்/பையோஎன்டெக், மாடர்னா, ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் இதுவரை அமெரிக்காவில் மொத்தம் 34,22,12,051 கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் மொத்தம் 34,18,18,968 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக கடந்த ஜூலை 25-ஆம் தேதி தகவல் வெளியானது. இதற்கிடையே அமெரிக்க சுகாதாரத்துறை இதுவரை முதல் டோஸ் தடுப்பூசியை 18,87,29,282 பேர் போட்டுக்கொண்டுள்ளதாகவும், இரண்டாவது டோஸ் தடுப்பூசியை 16,31,73,366 பேர் போட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.