நேபாளத்தின் ராணுவம் நேற்று எவரெஸ்ட் மலைச்சிகரம் உட்பட சுமார் நான்கு மலைகளிலிருந்து 34 டன் கழிவுகள் நீக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளது.
நேபாள நாட்டின் ராணுவம் ஒரு குழுவினருடன் சேர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 5-ம் தேதியிலிருந்து மலைச் சிகரங்களில் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறது. அதில், ராணுவத்தைச் சேர்ந்த 30 பேர், 48 மலையேற்ற வழிகாட்டிகள், மருத்துவர்கள் 4 பேர் உட்பட 82 நபர்கள் அதில் இருந்தனர்.
இம்மாதம் ஐந்தாம் தேதி, உலக சுற்றுசூழல் தினத்தன்று தூய்மை பணி முடிவடைந்தது. இதில், மனாஸ்லு, லோட்ஸே, கஞ்சென்ஜங்கா மற்றும் எவரெஸ்ட் போன்ற மலைச்சிகரங்களிலிருந்து மொத்தமாக சுமார் 34 டன் கழிவுகள் நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.