அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதில் 3400 ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
எகிப்து புகார் நகரத்தில் உள்ள பள்ளத்தாக்கில் பழமையான நகரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அகழ்வாராய்ச்சி குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்களை முதல் முறையாக ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். மண்ணில் புதைந்திருந்த Tutankhamun நகரம் சுமார் 3400 ஆண்டுகள் பழமையானது என்றும் அதனை Pharaohs என்ற மன்னர் ஆட்சி செய்தார் எனவும் தெரிவித்துள்ளனர்.
After the golden parade, Egypt uncovers a 3000yo golden city.
🎥 Video by me #Luxor #Egyptology#Archeologypic.twitter.com/fKZZV4ZmyU
— Ahmed Sameh (@EgyptWithAhmed) April 10, 2021
அகழ்வாராய்ச்சியின் போது மனித மற்றும் விலங்குகளின் எச்சங்கள், மண்பாண்டங்கள், நகைகள், முத்திரைகள், செங்கற்கள், பாத்திரங்கள் உள்ளிட்ட பல அரிய வகை பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் வாழ்ந்த குடியிருப்புகள், சேமிப்பு கிடங்குகள், கடைகள், அடுப்புகள், சுவர்கள், உணவுகள், பாத்திரங்கள் ஆகியவை எடுக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.