Categories
மாநில செய்திகள்

3,417 புதிய பணியிடங்கள்…. தமிழக அரசின் தீபாவளி பரிசு…. அரசாணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் 20 மாநகராட்சிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய அரசு பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதாவது சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், திருப்பூர், சேலம், ஈரோடு, தஞ்சை,ஆவடி மற்றும் தாம்பரம் உள்ளிட்ட 20 மாநகராட்சிகளில் 3417 பணியிடங்கள் விரைவில் அறிவிக்கப்பட்ட தேர்வு அடிப்படையில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதே சமயம் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி புதிய பணியிடங்களை உருவாக்கவும் ஏற்கனவே உள்ள பணியிடங்களை முறைப்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது. பணியாளர் பிரிவு, வருவாய் மற்றும் கணக்கு பிரிவு, பொறியியல் மற்றும் குடிநீர் வழங்கல் பிரிவு, பொது சுகாதார பிரிவு என பல பிரிவுகளில் இயங்கி வரும் பணியிடங்களை மேலும் அதிகரிக்க அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |