Categories
விளையாட்டு

344 வீரர்களில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை… என்பிஏ அதிகார்வப்பூர்வ தகவல்..!!

என்பிஏ தொடரின் கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள் 344 பேரில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற கூடைப்பந்து விளையாட்டு தொடரான என்பிஏ 2019-2020 சீசன் அமெரிக்காவில் இன்று தொடங்க உள்ளது. இந்திய நேரத்தின் படி அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் போட்டியில் நியூ ஓர்லியன்ஸ் பெலிகனஸ் – உதா ஜாஸ் அணிகளும் மோத உள்ளன. மற்றொரு போட்டியில் லாஸ் ஏஞ்சலீஸ் லேக்கரஸ் மற்றும் எல்ஏ கிளிப்பர்ஸ் அணிகளும் மோத இருக்கின்றன.இது பற்றி அமெரிக்க தேசிய கூடைப்பந்து சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள் 344 பேருக்கும் பரிசோதனை என்பிஏ வளாகத்தில் செய்யப்பட்டது. இந்தப் பரிசோதனையின் முடிவுகள் சென்ற ஜூலை 20-ஆம் தேதி வெளியாகிய நிலையில், வீரர்களில் ஒருவருக்குக்கூட கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வருடத்திற்கான என்பிஏ தொடரை நடத்துவதற்கு உரிய திட்டம் உறுதிசெய்யப்பட்ட நிலையில், வீரர்களின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்தத் தொடரில் 22 அணிகள் பங்கு பெறுகின்றன. ஆனால் ரசிகர்கள் போட்டிகளை நேரில் காண்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.  வருகின்ற அக்டோபர் மாதம் 13ஆம் தேதிக்குள் தொடரின் இறுதி போட்டி நடத்தப்படும் என்று கூறியுள்ளது. இதற்கு முன் இந்த வருடத்திற்கான தொடரை நடத்துவது பற்றி என் பிஏ மற்றும் தேசிய கூடைப்பந்து வீரர்களின் சங்கத்தினர் இத்திட்டத்தினை உறுதி செய்வதாக கடந்த ஜூன் மாதம் 26 ஆம் தேதி அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டின் என்பிஏ தொடர் மிகக் கடுமையான பாதுகாப்புகளுடன் நடைபெற இருக்கின்றது.

Categories

Tech |